தமிழகத்தில் அரசு அதிகாரிகள், சுரங்க மாஃபியாக்கள், காவல் துறை  என்ற வலுவான முத்தரப்பின் கூட்டிணைவு சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு தீவிர ஆதரவளிக்கிறதா? இது போன்ற கனிமவள சுரண்டல்கள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் மேற்கொள்ளப்படுகிறதா?” என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்; தமிழ்நாட்டின் தெற்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆற்று மணல், கடற்கரை மணல், சரளை மற்றும் சிவப்பு மண் போன்ற இயற்கை வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு எதிராக,  உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும், பிற நீதி மன்றங்களிலும் தொடரப்பட்ட தொடர்ச்சியான ...