உலகின் மிக சக்தி வாய்ந்த மதகுருவான போப் ஆண்டவர் தேர்வில் உள்ள அரசியல்களையும், சிக்கல்களையும் இவ்வளவு வெளிப்படையாக எடுக்க முடிவதே நம்மை வியக்க வைக்கிறது. யார் அடுத்த போப் என்பதில் கடைசி வரை ஊகிக்க முடியாத வகையிலான திரைக் கதை! பிரபல இயக்குநர் எட்வர்ட் பெர்கர் இயக்கிய திரில்லர் படம் இது; கான்க்லேவ் (Conclave) : போப் ஆண்டவர் தேர்தலைக் காட்டும் படம் போப் ஆண்டவர் இறந்த பிறகு, அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும், கர்தினால்கள் ஒன்று கூடி, தமக்குள் ஒருவரை போப் ஆண்டவராக  ...