கபாலீஸ்வரர் கோவிலிலும், ஸ்ரீரங்கம் கோவிலும் சிலைகள் களவாடிய குற்றச்சாட்டுக்கு உள்ளான டிவிஎஸ்.வேணு சீனிவாசன் குறித்து யாரும் பேசக் கூடாதாம்! கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திலும் எல்லோரும் ‘கப்சிப்’பாக இருக்கணுமாம்! யாரைக் காப்பாற்ற நீதிமன்றங்கள் கச்சை கட்டி களம் இறங்குகின்றன! ‘கோவில் திருப்பணி செய்கிறேன்’ என்ற பெயரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவன நாதர் சன்னதியில் மயிலொன்று மலரெடுத்து சிவனுக்கு பூஜை செய்யும் சிலையை 2004 ல் வேணு சீனிவாசன் களவாண்டுவிட்டார் என ரங்கராஜன் நரசிம்மன் பல ஆண்டுகளாக காவல்துறையில் புகார் அளித்தும் ...