கருப்பசாமி, அருப்புக் கோட்டை பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது! காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது! திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது! பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது! கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே! க.செபாஷ்டின், வேலூர் ‘அரசுப் ...
போதைப் பொருள், ரத்தம் தெறிக்கும் கொலைகள், இடையறா வன்முறை..இதுதான் விக்ரம்! முழுக்க முழுக்க இருள் சூழ்ந்த வன்முறைக் காவியமாக உருவாகியுள்ளது புதிய விக்ரம்! விட்டில் பூச்சிகளான இளம் இரசிகர்களுக்கு இது ‘வேற லெவல்’-ஆக இருக்கலாம். ஒரு தேர்ந்த கலைஞனான கமல் தயாரித்த படமா இது? படு குப்பை! உலகில் உள்ள அத்துணை ஆயுதங்களையும் காட்டிக் கொண்டு, படம் முழுக்க இரத்தக் கவிச்சை அடிக்கும் பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, போதைப் பொருளைப் பயன்படுத்துவது ஆண்மைக்கு அழகு என்பதைப் போல சித்தரித்துக் கொண்டு இப்பொழுது தமிழர் வாழும் நிலமெல்லாம் ...
கமலஹாசனின் விக்ரம் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த சினிமா தோல்விகளுக்கு பிறகு அரசியல் செய்த கமலஹாசன் இளம் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோருடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார். ஆனால், அரசியலில் இருந்து வெகு தூரம் விலகிப் போகிறார்! தன்னைத் தானும் உணர்ந்து பிறருக்கும் நம்பிக்கை அளிப்பவரே தலைவர். தைரியம் இல்லாமல் இன்செக்யூரிட்டி உணர்வில் உழல்பவர்கள் தலைவர்கள் ஆக முடியாது! கமலஹாசனின் விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் டிஸ்டிரிபூசன் செய்துள்ளது. ஒரு விழாவில் ”கமலிடம் நான் மிரட்டி ...