அமெரிக்க சமூகத்தை இருவேறாக பிளவுபடுத்தும் இந்த தேர்தலின் முடிவுகளை உலகமே அறிய ஆவலாய் உள்ளது. இரு தரப்பின் நிலைபாடுகளையும், கடுமையான போட்டியையும், வெற்றியை கணிக்க முடியாத சூழல்களையும், தோற்க நேர்ந்தால் டிரம்ப் செய்யவுள்ள வன்முறைகளையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை; அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதி நாள் நவம்பர்-5 ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தல் 1845 ம் ஆண்டு முதலே நவம்பரின் முதல் செவ்வாய்கிழமை தேர்தல் நாளாக அறியப்பட்டு வருகிறது. நமது நாட்டைப்போல் இந்த தேர்தல் நாள் மாற்றதக்கது அல்ல. ...