ரொம்ப ஓவரா பேசுறார், தோழர்! ‘பேசக் கூடாது, எழுதக் கூடாது’ என்று என்னை ரொம்பக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தேன். ஏனென்றால், நாம் ஒரு காலத்துல இருந்து, வளர்ந்த இடம். ஜனசக்தியில் தான் என் பயணம் ஆரம்பித்தது! அதனால், நான் பல விவகாரங்களில் அமைதி காத்திருக்கிறேன். ஆனால், பொதுச் சமூக மதிப்பீட்டிற்கும் கீழே இவர்கள் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தொட்டுக் காட்டுகிறேன்…! இதன் மூலம் சுதாரித்துக் கொண்டு தங்கள் சுயத்தை உணர்ந்து கொண்டார்கள் என்றால், அவர்களுக்கும் நல்லது. சமூகத்திற்கும் ...
















