கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டதில் திமுக மீது குறை சொல்வது ஏற்புடையதா…? கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஏன் தொகுதிகள் குறைக்கப்பட்டன என சுய பரிசோதனை செய்து கொண்டதுண்டா? உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்வதில் சூனியம் வைத்துக் கொண்டு எதிராளியை ஏசுவதில் என்ன பயன்? இன்னும் சுய பரிசோதனைக்கே தயாரில்லை இவர்கள்! அப்பப்பா! எத்தனை விதமான கோபங்கள், பச்சதாபங்கள், வருத்தங்கள்..! திமுக கம்யூனிஸ்டுகளை அலட்சியப்படுத்திவிட்டது, புறக்கணித்துவிட்டது..! நம் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை. கம்யூனிஸ்டுகளை கிள்ளுக் கீரையாக நினைகிறார்கள்.’’ இப்படியான சொல்லாடல்களை தொடர்ந்து கேட்டு ...
















