அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளரான தினேஷ் சீரங்கராஜின் டெல்லி மாணவர் போராட்ட கள அனுபவங்கள் அலாதியானது. காக்ரோச் ஜனதா கட்சி, காவல் துறையின் வன்முறை, இளைஞர்கள் அதை எதிர் கொண்ட விதம், பொது மக்களின் ஆதரவு, இடதுசாரிகள் பங்கேற்பு, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி சீர் குலைக்க முயன்றது, பாஜக அரசின் பழிவாங்கும் போக்கு போன்றவற்றை பேசுகிறார்; தில்லியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகமான அஜாய் பவனில் போராட்டம் முடிந்த ஆசுவாசத்தில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது; காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயர் ...
கல்வி விஷயத்தில், ”காசு, துட்டு, மணி, மணி…” என்ற பாடலை இடைவிடாது பாடிக் கொண்டிருக்கும் பாஜக அரசால் இன்று நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு, கியூட் தேர்வு, சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு முறை, டெட் தேர்வு கட்டாயம் என்பதன் பின்னணியில் உள்ள வணிக ஆதாயங்கள் ஒரு பார்வை; கல்வியை கடைச்சரக்காக்கியதே இன்றைய பிரச்சினைகளிலேயே பிரதானமானதாகும்! பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து அனைவருக்குமானதாக கல்வியை உறுதிபடுத்த வேண்டியதே அரசாங்கத்தின் கடமையாக – லட்சியமாக – இருக்க வேண்டும். ஆனால், ‘கல்வியை ஒரு லாபகரமான வியாபார ...
டெல்லி இன்று இளைஞர்கள் எழுச்சியால் திணறியது. நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு மோசடிகள், வேலை திட்டாட்டம், வளர்ச்சிக்கு தடையாகும் ஊழல், அதிகார மையங்களின் ஊதுகுழலாகி போன ஊடகங்கள், வாக்காளர்கள் நீக்கம் ஆகியவற்றை தட்டிக் கேட்டு அணி திரண்டனர். இரண்டேகால் கோடி இளைஞர்கள்! புதிய சிந்தனை போக்குகள்… ஒரு அலசல்; எப்படி அனுமதி மறுப்பீர்கள்? வரும் வழியில் ஆங்காங்கே பல தடைகள் உருவாக்கியது காவல்துறை. தடைகளை மீறி இன்று பல்லாயிரக்கணக்கில் தில்லியில் இளைஞர்கள் அணி திரண்டனர். இந்த பெருந்திரள் இளைஞர்களை கோபத்திற்கு ஆளாக்கி விபரீதத்திற்கு ஆளாக ...


















