உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது. மத்திய பாஜக ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்குகிறது என்பதை இந்த இளைஞர்களின் உறுதி குலையாத போராட்டங்கள் உத்திரவாதப்படுத்துகிறது. இது வரை அலட்சியம் காட்டிய அரசியல் தலைவர்களும் தற்போது பேசவும்,களம் காணவும் நேர்ந்துள்ளது. இரண்டாம் சுதந்திரப் போராட்டத்திற்கான வித்து விழுந்து விட்டது; எத்தனையோ விதத் தடைகள், முட்டுக்கட்டைகள் போட்டும், ஆயிரக்கணக்கில் காவல்துறையை களத்தில் இறக்கி அச்சுறுத்தியும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியில் இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம்..ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. வெள்ளையர்களைக் காட்டிலும் அதிகமாக ...