மேக்கே தாட்டு அணை விவகாரத்தில் திமுக, அதிமுக அரசுகள் காட்டிய மெத்தன போக்குகளே இன்றைக்கு கர்நாடகத்தின் துணிச்சலுக்கு காரணம்! காவிரி பிரச்சினையில் கருணாநிதி அவர்கள் இன உணர்வு அரசியலை நுழைத்து, தமிழகத்திற்கு ஆகப் பெரும் இழப்பை ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது; இன்றைக்கு சட்டமன்றத்தில் உதயநிதி, ”காவிரி நீர் பிரச்சினைக்காக அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் முதல்வர் டெல்லி அழைத்துச் சென்று வலியுறுத்த வேண்டும்” என அக்கறை காட்டும் தொனியில் பேசுகிறார். ஆனால், ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்த போது, ‘காவிரிச் சிக்கலுக்கு அனைத்துக் கட்சிக் ...
















