கரூரில் நடந்துள்ள பெருந் துயரத்தில் விஜய்க்கு எதிரான கருத்துருவாக்கங்கள் ஆளும் கட்சியாலும், அவர்கள் ஆதரவாளர்களாலும் தீவிரமாக பரப்பப்படுகின்றன. இந்த சம்பவத்தில் விடை தெரியாத மர்மங்கள் உள்ளன. உண்மைகள் வெளிவர தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத விசாரணை அமைப்பின் தேவையை விவரிக்கிறார் வழக்கறிஞர் எம்.எல்.ரவி. த.வெ.க தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடி வரும் நிலையில் – இருதரப்புக்கும் ஒருவருக்கொருவர் பகைமை முற்றியுள்ள அரசியல் சூழலில் – விஜய் பேசும் கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை – குற்றம் சாட்டப்படும்  திமுக அரசின் காவல் துறையே ...