கரூர் கூட்ட நெரிசல் மரண விவகாரத்தில் திமுக ஆதரவான பார்வைகளே அதிகம் வெளிப்பட்டு வந்த சூழலில், த.வெ.க தரப்பிலான குரல்கள் தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒலித்துள்ளது. நீதிபதிகள் வழக்கை அணுகிய விதம் அரசியல் அழுத்தங்களை கடந்து நீதி நிலை நாட்டப்படும், உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; ஆனால், பெரும்பாலான தமிழக ஊடகங்கள் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடந்தவற்றை முழுமையாக வெளியிடாமல் மேம்போக்காக பிரசுரித்துள்ளனர். இது எந்த அளவுக்கு அரசியல் அழுத்தங்கள் ஊடகங்களின் மீது இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது அல்லது ஊடகங்கள் அவற்றுக்கு இடம் ...













