கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் ராட்ச வேகத்தில் திருடப்பட்டும் மணல் கொள்ளையால் ஆற்று மணல் பரப்பே அதகளமாகியுள்ளது. ஆற்றுப்படுகை விவசாயிகள்  அல்லல்படுகிறார்கள். மணல் கொள்ளையை தட்டிக் கேட்போர் மீது போலீசையும், ரவுடிகளையும் ஏவி மிரட்டும் செந்தில் பாலாஜியின் அராஜகம் மாவட்ட மக்களை மருள வைத்துள்ளது; கரூர் மாவட்டத்தில் திருமுக்கூடலூர், அரங்கநாதன் பேட்டை, புதுப்பாளையம் , நெரூர் தென் பாகம் மற்றும் வடபாகம், முனியப்பனூர், மல்லம்பாளையம், வாங்கல், காளிபாளையம், கடம்பன்குறிச்சி, மேட்டுபாளையம், கிழக்கு தவுட்டுப் பாளையம், தோட்டக் குறிச்சி, மறவாபாளையம் மற்றும் குளித்தலை வரை காவிரி ...