தவிர்த்திருக்க கூடிய ஒரு பெரும் அசம்பாவிதம் அரங்கேறிவிட்டது! விஜய் , காவல்துறை, அரசு நிர்வாகம் என முத்தரப்பிலும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் உள்ளன. அலட்சியம், பொறுப்பின்மையோடு அறிவின்மையும் கைகோர்த்து நின்று 40 மனித உயிர்களை பலி கொடுத்த துயர நிகழ்வு ஒரு அலசல்; இந்த விவகாரத்தில் இன்னாருக்கு ஆதரவு, இன்னாருக்கு எதிர்ப்பு என்று தீர்மானித்துக் கொள்ளாமல் என்ன நடந்தது? எதை தவிர்த்திருக்கலாம் என்று பார்ப்போம்; நெரிசலான இடங்களில் ரோடு ஷோவும், அரசியல் பரப்புரையும் நடத்துவது கடும் நெருக்கடியாகிறது. ஆபத்துக்கு வாய்ப்பிருக்கிறது என்ற பட்டறிவை ...











