என்ன தான் நடக்கின்றது, கர்நாடகத்தில்? 2023-ல் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து கர்நாடகத்தில் சித்தராமையாவா? டி.கே.சிவகுமாரா? என்ற ஓயாத அதிகார யுத்தம் நடந்து கொண்டே உள்ளது. யார் முதல்வர் பொறுப்புக்கு உண்மையான தகுதியானவர்? இருதரப்பின் இடையறாத மோதலுக்கு காரணம் என்ன? ஒருவழியாக டி.கே.சிவகுமாரை சரிகட்டி, சித்தராமையாவை முதலமைச்சர் ஆக்கியது, காங்கிரஸ் மேலிடம். இதில் தலா இரண்டரை வருஷத்திற்கு இருவரும் பதவியை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சித்தராமையா முதலில் முதல்வராகும் முடிவு எட்டப்பட்டது என்ற பேச்சு பொதுவெளியில் சொல்லப்படுகிறது. இதை காங்கிரஸ் ...













