கருவில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்ய அனுமதிக்கலாமா? அப்படி ஸ்கேன் செய்வது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்காதா? அந்த ஸ்கேன் காட்டுவதெல்லாம் பலிக்காமல் போய்விடுகிறதே எப்படி? கருத்தறிப்பதும், குழந்தைப் பேறும் மருத்துவத் தலையீடுகளின்றி இயல்பாக நடக்க வாய்ப்பின்றி போவதா? நம் வாழ்வில் எத்தனையோ சுகங்களையும், செல்வங்களையும் நாம் பெற்றாலும், குழந்தை செல்வம் என்பதை நாம் ஆகப் பெரிதாக நினைக்கிறோம். இன விருத்தியாதல் என்பது இயற்கையான ஒன்று என்பதோடு, அவசியமான ஒன்று. உலகம் வளர்ச்சியை எட்டியுள்ளது, மருத்துவம் வளர்ந்துள்ளது என்கின்ற இன்றைய சூழலில், குழந்தைப் பேறு  சிக்கலுக்கு ...