எத்தனை வகையான விமர்சன அம்புகள், அவதூறுகளை வீசினாலும் அவற்றையெல்லாம் தாண்டி, இந்தப் படம் மக்கள் மத்தியில் சென்று மகுடம் சூட்டிக் கொண்டு விட்டது. அறிவு ஜீவிகள் சிலர் பேசுகிற பேச்செல்லாம் காற்றில் கலந்து போய் விடும். அணுவணுவாக ரசித்து, கொண்டாடி மகிழத் தான் எத்தனை அம்சங்கள் இருக்கின்றன..! அமரர் கல்கி இலக்கிய உலகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். இந்திய விடுதலைப் போராட்ட கால தேசபக்தர். அவர் சாதி, மத,இன, மொழி, வேறுபாடுகளைத் தாண்டி வாழ்ந்த தேசியவாதி. அவர் தமிழர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்றோ, தமிழ் ...

தமிழகத்தில் வெற்றி, வட இந்தியாவில் தோல்வி! காரணம் என்ன? கமர்ஷியல் ஆங்கிலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கதைக்குத் தரவில்லை. ஒமர்முக்தார், ஜோதா அக்பர் போன்ற வரலாற்றுப் படங்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் இதற்கு கிடைக்காமல் போனது ஏன்? என்னென்ன அம்சங்களில் கோட்டைவிட்டார்கள்? பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. பிரச்சினை என்னவென்றால், இது போன்ற பெரும் செலவில் மற்ற மொழிகளில் எடுக்கப்படும் வரலாற்றுப் படங்கள் வெறும் கமர்ஷியல் படமாக மட்டும் இருக்காது. புவியியல் அமைப்பு, மக்களின் வாழ்நிலை, போன்றவற்றை பிரதிபலித்தன. வரலாற்றை விளங்கிக் கொள்ளும் வகையில் நிதானமாக ...

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் இன்றும் பரவலாக பலரால் விரும்பி வாசிக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்தினம் இதை பிரம்மாண்ட திரைப்படமாக எடுத்து வருகிறார். ஆனால், இந்த நாவலில் உள்ள இந்துத்துவக் கூறுகளும், பிராமணப் பெருமிதங்களும் ஆபத்தானவை என்கிறார் ஆய்வாளர் பொ.வேல்சாமி. தமிழகத்தின் 10ஆம் நூற்றாண்டு கால சோழப் பேரரசு பற்றியும், அக்கால வாழ்க்கை முறை,  சமூகம், கலை, கலாச்சாரம், இயற்கை வளம், போர் முறைகள் அனைத்தையும் கற்பனை வளத்துடன் பிரதிபலிக்கும் நாவல் தான் கல்கியின் பொன்னியின் செல்வன்! 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி ...