மிகப் பிரம்மாண்டமாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழக முதல்வரோடு, தெலுங்கானா முதல்வரும் கலந்து கொண்டு பேசினார். சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். நல்லது. தமிழகத்தின் உண்மையான கல்வி நிலைமை என்னவென்று உள்ளதை உள்ளவாறு பார்ப்போம்; பார்க்கப் பார்க்க நெகிழ்ச்சி தந்தது! மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களை தந்தது! நேற்றைய தினம் கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்ற நிகழ்வைப் பார்த்த பலரின் அனுபவங்களும் இப்படித் தான் இருக்கும்! தைவானில் படிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள்! நியூயார்க்கில் படிக்கும் ஆட்டோ ...












