தமிழ்நாடு அரசு நிர்வாகத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் எப்படி எல்லாம் நுழைந்து இடம் பிடிக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாட்சியாக கல்வித் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் காரார் கைகளுக்கு போயுள்ளது கவலையுடன் விவாதிக்கப்படுகிறது. 2019 ஆகஸ்டில் அன்றைய அதிமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி ஒன்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது. இந்த தொலைகாட்சியானது கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதில் ...