இப்படியும் நடக்குமா? கல்குவாரிகள் வைத்திருப்பவர்கள் தான் இங்கே அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கிறார்களா? கல்குவாரிக்கு நிலம் தர மறுத்த இந்த  விவசாயக் குடும்பமே சுற்றிலும் இரும்பு முள்வேலி அமைத்து சிறை வைக்கப்பட்டுள்ளது; அரசாங்கத்திற்கு அனுப்பட்ட எந்த புகாருக்கும் பலனில்லையாம்; தமிழ்நாட்டில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கல் குவாரிகள் அமைக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து அனுமதித்து வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் இதில் அனைத்து சட்ட விதிமுறைகளையும் மீறி ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி அனுமதிக்கப் பட்டவர்கள் அங்கிருக்கும் மலைகளை மொட்டை அடித்து கிரஷர் அமைத்து பெரும் இயந்திரங்களைக் ...