கலவரம் செய்தது ஆதி திராவிடர்களாம்! கவுண்டர் சமூகத்திற்கு அவர்கள் விரோதிகளாம்! நடந்தவை சாதிய பழிவாங்கலாம்! இது சாதிக் கலவரமாக மாறுமாம்! இது உளவுத் துறையின் திரைகதை! இதற்கு ஊடகங்கள் பரப்புரை! இதன் மூலக்கதை யார்? விதவிதமான கட்டுக் கதைகளின் பின்னுள்ள நோக்கங்கள் என்ன? கலவரம் நடந்த அடுத்த நாளே வட இந்திய ஆங்கில ஊடகமான தி குயிண்ட் (the quint) பள்ளியில் நடந்த கலவரத்தின் பின்னணியில் சாதிய சக்திகள் இருந்தன என காவல்துறை கூறியதாக எழுதியது! அதையே தற்போது மேலும் விரிவாக உளவுத் துறை ...
கள்ளக் குறிச்சி மாணவியின் மரணத்தை அரசு நிர்வாகம் கையாண்ட விதம் தான் அந்தப் பகுதியை இன்று கலவர பூமியாக மாற்றியுள்ளது. செல்வாக்கான நிர்வாகத்திற்கு சார்பாக அரசு நிர்வாகம் இருக்கிறது என்ற தோற்றம் நாளுக்கு நாள் வலுத்த நிலையில் நான்காவது நாள் அது தீவிரம் பெற்று வன்முறை வடிவம் கண்டுவிட்டது. அந்தப் பள்ளியை நடத்துபவர் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதனால், தமிழக அரசுக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் தரப்பட்டு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாகவே இது போன்ற பிரச்சினைகளில் சக்தி வாய்ந்த ...