கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு சிறப்பு கட்டுரை திரைப்படங்களில் பெண் பாடுவதாக அமைந்த பாடல்களில் எல்லாம் கண்ணதாசன் பெண்ணாகவே அவதாரம் எடுத்து தன் அனுபவத்தை சொல்கிறாரோ.. என்று திகைக்க வைக்கும் வண்ணம் பாடல் வரிகள் இருக்கின்றன. ..! பெண்களால் மட்டுமே உணர முடிந்த பெண் மனதின் நுட்பங்களை தன் பாடல் வரிகளில் கண்ணதாசன் சொல்லிய பாங்கு வியக்க வைக்கின்றன; தமிழ்ப் புலமை, சொல்லாற்றல், கவி நயம் ஆகியவை பொதுவானவை! அவற்றை பயிற்சியுடைவரகள் எவரும் முயன்றால் அடையலாம். ஆனால், மனிதர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தை, தவிப்பை, இயலாமையை, காதல் ...
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை; 2 தமிழ்த் தாய் பெற்றெடுத்த தவப் புதல்வராம் கண்ணதாசனோடு நாள் தோறும் பேசிப் பழகும் அரிய வாய்ப்பு என் பத்திரிகை பணியினால் வாய்த்தது நான் பெற்ற பெரும் பாக்கியம் என்று தான் சொல்வேன். பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டலில் அன்று காங்கிரஸ் நாளிதழாக வெளியான நவ சக்தியில் நான் செய்தி ஆசிரியராக இருந்த போது கவிஞருடன் நட்பு துளிர்த்தது; அந்த காலகட்டத்தில் கவிஞர் ‘கண்ணதாசன் கடிதம்’ என்ற பகுதி நாள்தோறும் கண்ணதாசன் எண்ணவோட்டமாக நவசக்தியில் வெளிவரும். அதை வாங்கி ...
வாசகர்களை மட்டுமே பெற்ற எழுத்தாளரில்லை, கவிஞர் கண்ணதாசன்! தீவிர நேசர்களை, எண்ணிலடங்கா தாசர்களை, கவிதைப் பித்தர்களை, ஏன், கசிந்துருகும் பக்தர்களையும் தன் எழுத்தாற்றலுக்கு பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். இப்படிப்பட்ட கண்ணதாசனின் பன்முக ஆளுமைகளை பார்க்கும் போது, ‘இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருப்பாரா?’ என வியப்பே மேலிடுகிறது; கண்ணதாசன் நூற்றாண்டு விழாக்கள் தமிழ் நாடெங்கும் நடந்து கொண்டுள்ளன..என்பதை விடவும், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலெல்லாம் கூட நடந்து கொண்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளில் கூட கண்ணதாசன் தொடர்பான பேச்சு போட்டிகள், கட்டுரை, கவிதை போட்டிகள் ...


















