ராஜஸ்தானில் 90 சதவிகித எம்.எல்.ஏக்கள் விரும்பாத சச்சின் பைலட்டை முதல்வராக்கத் துடிக்கிறது டெல்லி தலைமை! ஜனநாயக பூர்வமாக தங்கள் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு மறுக்கபடுமானால், அங்கு காங்கிரஸ் காலியாவதை யாரால் தடுக்க முடியும்? மீண்டும், மீண்டும் ஒரே தவறை செய்து கொண்டுள்ளது காங்கிரஸ் தலைமை! ‘ஜனநாயக முறைப்படி ஒரு மாநிலத்தில் அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றவர் முதல்வராக முடியாது. தலைமைக்கு வேண்டியவர் தான் முதல்வராக முடியும்’ என்பதை எழுதப்படாத விதியாக காங்கிரஸ் தலைமை கடைபிடிப்பது தான் அதன் ஆகப் பெரிய ...