ராமன் எத்தனை ராமனடி? என்று ஆச்சரியப்படும் விதத்தில் ராமர் பெயரில் விதவித அவதாரங்களை எடுத்து அரசியல் வியாபாரத்தை நடத்துகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு ஒரு ராமர்! மசூதியை இடிக்க ஒரு ராமர்! நிலங்களை அபகரிக்க ஒரு ராமர்! நிதி திரட்ட ஒரு ராமர்! சிலையாய் நிற்க ஒரு ராமர்! காணிக்கை பணத்தை களவாட…வென்று! இதுவரை இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தான் பணக்கார கோவில் என்று இருந்ததற்கு சவால் விடும் வண்ணம், அயோத்தி ராமர் கோவில் உருவாகி உள்ளது. திருப்பதி கோவிலைக் காட்டிலும் பன்மடங்கு பெரிய ...