காந்திக்கு இணையாக எண்ணத்தக்கவர் ஜே.சி.குமரப்பா! இந்தியாவின் ஆன்மாவை பூரணமாக உணர்ந்தவர். இந்தியப் பொருளாதாரம் குறித்த குமரப்பாவின் காந்தியக் கண்ணோட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், இன்று நம் நாட்டில் வறுமைக்கே வழியில்லை. சுரண்டலுக்கு வாய்ப்பில்லை. அனைவருக்கும் உரிய கண்ணியமான வாழ்க்கைக்கான தாய்மை பொருளாதாரத்தை அடையாளப் படுத்தியவர் குமரப்பா! ”ஆன்மாவின் லட்சியங்களுக்கு உதவுவதற்கானதாக உடலை கருதுவதா? உடல் ஆதிக்கத்தில் ஆன்மாவையே இல்லாமலாக்குவதா? நம் பொருளாதாரம் எந்த திசை வழியில் செல்ல வேண்டும்” என குமரப்பா கேள்வி எழுப்பினார்? இன்று ஆன்மாவைத் தொலைத்துவிட்டு பொருளியலைத் தேடி சுயஅழிவுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ...