காந்தி தினசரி சுமார் 80 கடிதங்கள் எழுதியுள்ளார். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் எழுதியுள்ளார். சக மனிதர்கள் மீதான அன்பு, கரிசனம், அக்கறை.. ஆகியவற்றை அவரது கடிதங்கள் வழியே அறிய முடிகிறது. பிரபலங்கள் தொடங்கி சிறு பிள்ளைகள் வரை எழுதப்பட்ட பரஸ்பர கடித பரிமாற்றங்கள் வெகு சுவாஷ்யமானவை; காந்தியின் கடிதங்கள்’ என்ற தலைப்பில், புது தில்லியில் உள்ள காந்தி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநரான அண்ணாமலை, திருவொற்றியூர் கிளை நூலகத்தில், இரண்டாவது சனியன்று உரையாற்றினார். காந்தியின் எண்ணவோட்டம், எளிமை, அழகியல், வீச்சு என ...













