இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்சும், இந்து மகாசபை போன்ற இயக்கங்களும் வேரூன்றி, விருட்சமாக வளர்ந்து, இந்த நாட்டையே தங்கள் பிடிக்குள் வைத்திருக்கின்றன என்றால், அதற்கு இந்த பிராமண இதழ்கள் மறைமுகமாக எப்படி பங்களித்தன என்பதை காந்தி கொலையின் போது இவர்கள் எழுதிய தலையங்கங்களே சாட்சியாகும்! இன்றைய இந்து தமிழ் திசையில் காந்தி இறந்த போது வெளியான அன்றைய இந்து தலையங்கத்தை தமிழில் மொழி பெயர்த்து ஆவணப் பதிவாக வெளியிட்டு உள்ளனர். அந்த தலையங்கம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது; ”தேசப் பிதா மகாத்மா காந்தியடிகளை அறிவற்ற ஒருவர் புது ...