காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த உலகத்திற்கும், இன்றைய உலகத்திற்குமான நிதர்சனங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய தேவைக்கேற்ப காந்தி வியூகங்களை வகுத்தார். இன்றைய காலகட்டத்தை காந்தியப் பார்வையோடு நாம் பொருத்திப் பார்த்தால் பல தெளிவுகளை அது நமக்குத் தருகிறது; வக்கீல் தொழில் நடத்தி தனது வாழ்க்கையை தொடங்க நினைத்து தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி ஏன் முற்றும் சம்பந்தமில்லாத பொது வாழ்வில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டார்…? தன் வாழ்வு தன் வருமானம் குடும்பம் முன்னேற்றம் என்றுதானே ஒவ்வொரு சராசரி மனிதனும் நினைத்திருப்பான். இவர் ...
காந்தியடிகள் சத்தியம் என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். உண்மை என்பதை அறம் என்று பொருள் கொண்டால், அறத்தையே காந்தியடிகள் கடவுளுக்குச் சமானமாகப் பார்க்கிறார். அறம் சார்ந்த வாழ்க்கைக்கு எதை தவிர்க்க வேண்டும், எதை கை கொள்ள வேண்டும் என காந்தி காட்டும் வழிமுறைகளை பார்ப்போம்; காந்திய மொழியில் உண்மையென்றால், அறமெனப்படும். அந்த அறமே வெல்லும் என்கிறார் காந்தியடிகள். வாழ்வு என்பது மானுடருக்கு இலக்கு நோக்கிய பயணம் அல்லது இலக்கு தவிர்த்த பயணமாக இருக்கிறது. வெற்றி என்பது இலக்கு நோக்கிய பயணத்தின் பயன். இலக்கு சார்ந்த பயணத்தின் ...