அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் காந்தியின் ராம ராஜ்யம் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளதாம் மோடியின் பாஜக அரசு! காந்தி தீவிரமான ராம பக்தர் தான்!  ஆனால், தற்போது எழுப்பப்பட்டுள்ள ராமர் கோவில் நமது தேசத் தந்தை காண விழைந்த ராமர் கோவிலா? இது தான் காந்தியின் கனவா..? என்பதை பார்ப்போம். முதலாவதாக ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். காந்தி ராம ராஜ்யத்தை விரும்பியவரே அல்லாது, ஒரு போதும் பாபர் மசூதியை இடித்து, அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக் கேட்டதாக எங்குமே வரலாற்றில் ...

ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு ஊடகங்கள், அவர்களின் சமூக வலைத்தளங்கள்..ஆகியவற்றில் மகாத்மா காந்தியின் தியாக போராட்ட மரபு ஊனமாக்கப்படுகிறது. மகாத்மா காந்தி மீது பொய், அவதூறு, விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். காந்தி கோழையாம்! கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதே சேவையாம்! காலனி ஆட்சி காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக அகிம்சை போராட்ட முறைகளில் இந்திய மக்களை வழி நடத்தியதன் மூலம் மக்களை கோழையாக்கி விட்டார் என்று கூசாமல் சொல்கிறார்கள், இந்துத்துவவாதிகள்! தனி மனிதனது உயர்வுக்கு சொன்னதே மகாத்மா காந்தி அகிம்சை. அது அவரது அரசியல் போராட்ட வழிகள் அல்ல. ...