தனியார் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை தாரை வார்த்து, அரசு காப்பீட்டு நிறுவனங்களை அதிகாரமற்றதாக்குகிறது பாஜக அரசு. பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்ற இனி என்ன செய்ய வேண்டும்? என விளக்கும் பொதுக் காப்பீட்டு தொழிலாளர் சங்கச் செயலாளர் எஸ். சவரிமுத்து நேர்காணல்; காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று கோரி வருகிறீர்களே ஏன் ? இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மக்களுக்கு ஆதரவான கொள்கைகள் எடுக்கப்பட்டன. 1956 – இல், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ( LIC) அரசுடமை ஆக்கப்பட்டது. 1969 – ...













