அறம் ஊடக ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள். தங்கள் இணைய ஊடகத்தில் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் தாளாளரான என்னைப் பற்றிய நீண்ட அவதூறு கட்டுரையை நண்பர்கள் என் பார்வைக்கு அனுப்பியுள்ளார்கள். ‘இறைநேசன்’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள குற்றசாட்டுகளை முற்றிலும் மறுப்பதுடன் உண்மையான விவரங்களை சுருக்கமாக அளிக்க விரும்புகிறேன். 1975-ஆம் ஆண்டு அரசாணை எண்.18 மற்றும் அரசாணை எண்.479 நன்மங்கலம் வனபகுதியில் 40 ஏக்கர் வழங்க தமிழக அரசால் ஆணையிடபட்டு, 6 ஜனவரி 1976 – ஆம் ஆண்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் அறக்கட்டளை பொதுச்செயலர் ...
முஸ்லீம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு நிலம் தந்து, ஆசிரியர்கள் ஊதியமும், பல உதவித் தொகைகளையும் வழங்குகிறது. இவ்வளவையும் ஒரு தனி நபர் தன் சொந்த ஆதாயத்திற்கானதாக மாற்றி, அடித்தள ஏழை மாணவர்களிடம் ஈவு இரக்கமின்றி வசூல் வேட்டை நடத்தி அதிகார ஆட்டம் போடுவது எப்படி? 1974ம் ஆண்டு திருப்பூர் முகைதீன், கே.எஸ். அப்துல்வகாப் ஜானி (Ex MLC) எம்.ஏ. அப்துல் லத்தீஃப் MLA, ஏ. கே. ரிஃபாய் Ex M.P, எம். செய்யது முஹம்மது,திண்டுக்கல் நானா மூனா கனி, சிலார் மைதீன், ...