எங்கே பேரழகு உள்ளதோ, அங்கே பேரழிவும் மறைந்தே இருக்கும் என்பது இதயத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் (ஆகஸ்ட் 26 )நிரூபித்துள்ளது. ஆனால், இந்தப் பேரழிவுக்கு பேராசை ஆட்சியாளர்களும், கார்ப்பரேட்களும் கைகோர்த்து இயற்கையை சூறையாடியுள்ளதை வசதியாக மறைக்கிறார்கள்; இந்தியாவின் எல்லைக்கு அருகே இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடான நேபாளம் இந்தியாவை பொறுத்த வரை ஒரு ஆன்மீகத் தளமாகும்.  திபெத் எல்லையோரம் அமைந்துள்ள  ரசுவா மாவட்டத்தில் பாயும் போதே கோஷி நதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பெருவெள்ளம் ...