காடுகளையும், மலைகளையும் காக்காவிட்டால் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியாது. மானுட வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீரையும், தூய காற்றையும் இவையே தருகின்றன. இவற்றை காப்பாற்றத் தவறும் போது அச்சுறுத்தும் கால நிலை மாற்றங்களை நாம் சந்தித்தாக வேண்டும்; ‘காடும் காலநிலை மாற்றமும்’ என்ற பொருளில் சுற்றுச் சூழல் கருத்தரங்கு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தாக்கம் ஒட்டுமொத்த தெ இந்தியாவையே பாதிக்கும். புவி வெப்பம் அடைவதால் பருவ மழை தவறுகிறது. நிலச் சரிவு, பெருமழை ஏற்படுகிறது. இதனை எதிர் கொள்ள , ...