தமிழகத்தின் மிக ஆபத்தான மனிதராக தமிழ் மக்களால் அறியப்படும் ஆர்.என்.ரவி” வாயைத் திறந்தால் வன்மம், வந்து விழும் வார்த்தைகள் அனைத்தும் ஆசிட்.. என செயல்படுவதன் பின்னணி என்ன? கால்டுவெல்லையும், ஜியு.போப்பையும் காழ்ப்புணர்வுடன் பேசியது எதனால்? அவரை இயக்குவது யார்..? அதிரடியாகப் பேசுவது.., அனைவரையும் திரும்பி தன்னை பார்க்க வைப்பது, கூசாமல் பொய்யுரைப்பது என தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இயங்கி கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அரியதொரு கண்டுபிடிப்பை பேசியுள்ளார்! ”பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். ராபர்ட் ...