காவல் சித்திரவதைகளை தடுக்க சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் சபை பல வழிகாட்டல்களை தந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தி உள்ளது. எனினும் மீண்டும், மீண்டும் கஸ்டோடியல் டெத் நடக்க காரணம் என்ன? சிவகங்கை மாவட்டம்மடப்புரம் அஜித் குமார் கொலை தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்கள் தமிழகக் காவலர்கள் என்பதே. ஜூன் 28 ல் அவர் கொல்லப்பட்டாலும் ஜுன் -30 தான் இந்த செய்தி பரவலாக கவனம் பெறுகிறது. ...