தமிழ்நாட்டில் தற்போது காவல்துறையின் மீதான நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது! ‘ரசியல் செல்வாக்கானவர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தமிழக போலீஸில் ஒரு போதும் நியாயம் கிட்டாது’ என்ற நிலை நாளுக்கு நாள் உறுதியாகிக் கொண்டுள்ளது. ஒரு விரிவான பார்வை; பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரும் போது, பாதிப்புக்குள்ளாகியவர் செல்வாக்கானவர் என்றால், காவல்துறை இதில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு கூட தயக்கம் காட்டுவது என்பது காவல் துறை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கான சிறந்த அடையாளமாகும். இப்படி நடந்து கொண்டதால் தான் கள்ளக் ...