நீர் மேலாண்மையில் தமிழக ஆட்சியாளர்களின் தற்குறித் தனத்திற்கு தற்போதைய காவிரி நீர் தினசரி 15 டிஎம்சி கடலில் சென்று வீணாவதே சாட்சியாகும். காவிரி பாசன கடைமடை பகுதிகளில் பயிர்கள் தண்ணீர் வரத்தின்றி வாடிக் கிடக்கின்றன..! மணல் குவாரிகளின் விளைவால் வெள்ள நிவாரண முகாம்கள்.. காவிரி ஆற்றுப் படுகைகள் மணல் குவாரிகளால் பள்ளத்தாக்குகளாகி கிடப்பதால் காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து டெல்டா மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் நிவாரண முகாம்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். காவிரியில் வரும் தண்ணிர் கிளை ஆறுகள் வழியே வாய்க்கால்களில் பயணப்பட்டு பயிர்களை ...