இது வரை கர்நாடக அரசு தான் காவேரி விவகாரத்தில் பொய் பேசி வந்தது. தற்போது மத்திய அரசும் அவர்களுடன் கைகோர்த்துள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்கனவே நாம் அதிகம் இழந்துள்ளோம். இனியும் நாம் காவேரியில் கிடைக்கும் தண்ணீரை வீணாக்க கூடாது என்ற நோக்குடன், தமிழ்நாடு துறைசார் வல்லுநர்கள் தமிழ் நாட்டரசு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து கூறியதாவது; தமிழ்நாடு துறைசார் வல்லுநர் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 27, 2026 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர். ஒரு நதிநீரை பங்கிடுவதற்கு உலகளாவிய தார்மீக மரபு உள்ளது. மனிதநேயத்தோடு, ...















