காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு –பாகம்-1 நாளும் குண்டுச் சத்தம் வெடித்த வண்ணம் உள்ளது காஷ்மீர். இந்தியாவின் ராணுவச் செலவில் பெரும் பகுதி காஷ்மீரை காப்பாற்றுவதில் செலவாகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு..? என முடிவுக்கு வருவதற்கு, இந்த பிரச்சினையை  ஆதியோடந்தமாகப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்; 2019 ஆகஸ்ட் 5ல் , காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதியை ரத்து செய்த மோடி, தில்லிக்கும் ஶ்ரீநகருக்கும் உள்ள தூரத்தை (Delhi ki doori) மட்டுமின்றி மனதிற்கும் காஷ்மீருக்கும் (dil ki doori) உள்ள தூரத்தையும் ...