கிராமங்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லாடுகின்றன…! நோயுற்றால் மருத்துவமில்லை. பேருந்து வசதி இல்லை. இருந்தாலோ சரியான சாலை கிடையாது. அங்கன்வாடிகள், பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. வளங்கள் எல்லாம் நகர்புறத்திற்கு! வறுமை மட்டுமே கிராமத்திற்கா? வளர்ச்சி என்பது யாருக்கானது..? அந்தக் காணொலி நெஞ்சைப் பிழிந்தது. நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவரான என் நண்பர் சமீபத்தில் ஒரு காணொளியை அனுப்பி இருந்தார். அந்த ஊராட்சியில் யானையால் தாக்கப்பட்டு இறந்த ஒரு பெண்மணியின் சடலத்தை முதுகில் தூக்கிக் கொண்டு அவரது உறவினர்கள் செல்வதாக இருந்த அந்த காணொளி இந்த நாட்டில் ...