காலனி ஆதிக்கத்தின் எச்சமான கிரிக்கெட் இந்திய சமூகத்தில் எவ்வாறு வேரூன்றியது? ஆதிக்க சமூகத்தின் அடையாளமாக எப்படி மாறியது..? ஒரு சாதியினரின் ஆதிக்கம் எப்படி கொடி கட்டிப் பறந்தது..? இன்று எப்படி அது உடைபட்டு வருகிறது! கார்ப்பரேட் கலாச்சாரத்தின் தூதுவனாக மாறிப் போன வரலாறு குறித்த ஒரு அலசல்; மழை விட்டும் தூவானம் நிற்காததைப் போல உலகக்கோப்பை கிரிகட்டைப் பற்றிய அதிர்வுகள் சமூக தளத்தில் தொடர்கின்றன! அத்துணை தூரம்  கிரிக்கெட்  கலாச்சார மரபாக நம்மிடையே  ஊறிப் போய்விட்டது . 1947 –ல் விடுதலை பெற்றுவிட்டோம் ஆனால், ஆங்கிலேயர்கள் ...