கொல்கத்தாவில் மருத்துவ மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதிக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் கொந்தளித்தது. கிருஷ்ணகிரி பள்ளியின் 13 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும், எங்குமே போராட்டம் நடத்தவில்லை. என்ன நடந்து கொண்டு இருக்கிறது..? கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள கந்தி குப்பத்தில் இயங்கும் பிரபல தனியார் பள்ளியான கிங்ஸ்லி கார்டன் பள்ளியில் என்.சி.சி முகாம் என்பதாக போலியான ஆட்களை வைத்து நடத்தப்பட்ட முகாமில் 13 பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் பள்ளி ஆசிரியர்களிடமும், முதல்வரிடமும் ...