எளியோரை வாழ வைத்து, எளியதொர் வாழ்வையே கைக்கொண்டு, காந்தியச் சுடரொளியை அணையாமல் அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனின் ஆளுமைத் திறனும், அரிய பண்பு நலன்களும் இன்றைய இளைய தலைமுறையினரை எவ்வாறெல்லாம் ஈர்க்கிறது என விவரிக்கிறார் க.பழனித்துரை; கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை தெரியாத காந்தியர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் ஜூன் 16ஆம் தேதி தன்னுடைய 100 அகவையில் அடி எடுத்து வைத்தார். அதைக் கொண்டாட பலர் காத்திருந்தனர், பலர் விழா எடுக்க முனைந்தனர். தான் ஒரு காந்திய செயல்பாட்டாளர், எனக்குத் தேவை ஒரு செயல். ...













