கணவன், மனைவி இருவரும் வழக்கறிஞர்கள்! ஒரு பாலியல் வழக்கில் பெண்ணுக்கு கணவனும், ஆணுக்கு மனைவியும் ஆஜராகி வாதாடுகிறார்கள்! யார் வெற்றி பெறுகிறார்? இதனால், தொழில் முறையில் எதிர்ரெதிர் நிலையில் நிற்கும் இருவருக்குமான குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்கள் என்னானது? நீதிமன்றத்தில் நடைபெறும் கதை என்று புரிதலுக்காகச் சொல்லலாம். இந்தப் படத்தில் எபினும், மாதவியும் திருமணமாகாத இளம் வழக்கறிஞர்கள். எபின், சுயேச்சையாக தொழில் நடத்த ஒரு அலுவலகம் போட நினைக்கையில் அவனுக்கு அரசாங்க வழக்கறிஞர் பதவி கிடைக்கிறது. டொவினோ தாமஸ், எபினாக நடித்துள்ளார். கணவன் குற்றவாளியாக ...