உலக அளவில் பேசப்பட வேண்டிய கீழடியின் அதிசயத்தக்க அகழாய்வுகள் ஏன் மறைக்கப்படுகின்றன…? உலகின் தலை சிறந்த, தொன்மையான பெருநகர நாகரீகத்தையும், பண்பாட்டையும்  தமிழ் சமூகம் கொண்டிருந்ததற்கான ஆய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசும், மாநில திமுக அரசும்  ஒருசேர தர மறுக்கின்றன! என்னதான் நடந்து கொண்டிருக்கிறது..? சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண ஊராட்சி? ஒன்றியமாக இன்று நாம் பார்க்கும் திருப்புவனம் சங்க காலத்தில் ஒரு பெரு நகரமாக இருந்திருக்கிறது என்பதற்கான பட்டவர்த்தனமான பல அடையாளங்கள் கீழடி அகழாய்வில் தெரிகின்றன. அதாவது இந்தியாவின் தொல்லியல் ...