தொல்லியல் அகழாய்வுகளின் வழியே புதைக்கப்பட்டிருந்த நமது தொன்மை நாகரீகச் சிறப்புகளை மீட்டெடுத்து தந்தது பிரிட்டிஷ் அரசு. சிந்துவெளி அகழாய்வில் தமிழர் பண்பாட்டை அகிலத்திற்கே சொன்னார், சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல். ஆனால், கீழடியில் வெளிப்பட்ட  தமிழர்களின் தொன்மையை மீண்டும் புதைக்க துடிக்கிறது இந்திய அரசு..! சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களின் சிலை திறப்புக்கு ஒரு சல்யூட்! தமிழ்ச் சமூகம் என்றென்றும் தலை வணங்கி போற்ற வேண்டிய சில முக்கிய ஆங்கிலேய ஆளுமைகளில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் குறிப்பிடத் தக்கவர். 1902 தொடங்கி ...