கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டுமின்றி, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள்,புண்கள், புரைகள், வீக்கம், குருதி வடிதல் போன்ற நோய்களுக்காக மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றது. தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை  கீழா நெல்லியாகத் தான் இருக்கும். மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி என்று பலருக்கும் தெரியும். ஆனால், உட்கொள்ளும் முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது. சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள் தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் ...