நிலத்தடி நீர் பாசனமே அற்றுப் போகும்.. ஏரி, குளம், குட்டை, கிணறுகளுக்கு நீர் கிடைக்காது. பயிர்கள் அழியும், பறவைகள் மடியும்! குடி நீர் பஞ்சம் ஏற்படும் கொங்கு மண்டலமே பாலைவனமாகும் பல்லுயிர் பெருக்கமே சிதையும். சுற்றுச் சூழலே சூனியமாகும்..! இவையெல்லாம் கீழ்பவானி கால்வாயை பலப்படுத்த தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிகழும் அசம்பாவிதங்கள்! ஆகவே, நாங்கள் இதை செயல்படுத்த அனுமதிக்கமட்டோம்’ என கொங்கு மண்டலமே போர்க்கோளம் பூண்டது போல உண்ணாவிதங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுக் கொண்டுள்ளன! இவ்வளவு பயத்தை ஏற்படுத்தி இருக்கும் ...