குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்தனர்! பாஜக ஒடிசா பழங்குடியினத்தின் திரெளபதி முரமுவை அறிவித்தது. பழங்குடியினத்திற்கு பாஜக அரசு இழைத்து வரும் கொடுமைகள் கொஞ்சமா? நஞ்சமா? திரெளபதி அம்மையாரின் யோக்கியாம்சங்கள் புல்லரிக்க வைக்கின்றன! ”பழங்குடியினத்தில் இருந்து முதன்முதலாக இந்தியாவில் ஒருவர் குடியரசுத் தலைவராகிறார், அதுவும் ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என சந்தோஷப்பட்டு கடந்து செல்ல முடியவில்லை. காரணம், இன்று இந்தியாவில் வாழும் 20 கோடி பழங்குடியினரை பெரும் அச்சுறுத்தலில் வைத்திருக்கும் ஒரு அரசாக பாஜக அரசு உள்ளது. பழங்குடியினர் காலம் ...