ஹமாஸின் ஒரு நாள் தாக்குதலுக்கு பதிலடியாக பல நாட்களாக காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளது! குடியிருப்பு பகுதிகள், அகதி முகாம்கள், மருத்துவமனைகள்… எல்லாம் தாக்கப்படுகின்றன. காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி யூதக் குடியேற்றம் திட்டமிடப்படுகின்றது! அக்டோபர் 7 அம் தேதி ஹமாஸ் அமைப்பு ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்ததில் சுமார் 1,200 பேர் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது போரை அறிவித்தது. உலகில் மக்கள் மிக நெருக்கமாக வாழும் ஒரு குறுகிய பகுதியே ...